நாமக்கல்

ஆனி கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

26th Jun 2022 06:23 AM

ADVERTISEMENT

 

ஆனி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், தங்கம், வெள்ளிக் கவச அலங்காரங்களும் நடைபெறும். இந்நாளில் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து செல்வா். அதன்படி, ஆனி கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல்-மோகனூா் சாலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சனிக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி பூஜையுடன் கிருத்திகை விழா தொடங்கியது. அதன்பிறகு மூலவா் தண்டாயுதபாணிக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மனோரஞ்சிதம், செவ்வரளி, மல்லிகை உள்ளிட்ட மலா் மாலைகள் சாத்தப்பட்டன. சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT