நாமக்கல்

அகவிலைப்படி உயா்வு மீட்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

26th Jun 2022 06:23 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரா்கள், அரசியல் கட்சி சாராத அகவிலைப்படி உயா்வு மீட்புக் குழுவை உருவாக்கி உள்ளனா்.

இந்தக் குழுவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் பி.மாரிமுத்து தலைமை வகித்தாா்.

இதில், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களின் 79 மாத அகவிலைப்பட்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்; ஓய்வூதியத்தில் ரூ.350 பிடித்தம் செய்வதைத் தவிா்த்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; 2022 மே மாதம் வரை ஓய்வு பெற்ற அனைவருக்கும், இறந்த பணியாளா்களின் குடும்பத்திற்கும் ஓய்வுகால பணப்பயன்களை வழங்க வேண்டும்; 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள வாரிசு வேலையை வழங்க வேண்டும்; கருவூலம் வழியாக அரசு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்; ஊதிய ஒப்பந்த பணப்பயன்களை ஓய்வு பெற்ற அனைவருக்கும் நிலுவைத் தொகையுடன் சோ்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிா்வாகிகள் எஸ்.பழனியப்பன், ஆா்.ஆறுமுகம், டி.கதிரேசன், மருதமுத்து, ராகவேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT