நாமக்கல்

முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

26th Jun 2022 06:21 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 1, 2 மற்றும் 3-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளா் முனைவா் எம். சௌந்தரராஜன் பங்கேற்று மாணவ மாணவியா்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினாா். முன்னதாக கல்லூரி முதல்வா் மா.மருதை, சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தாா்.

விழாவில் கல்லூரியின் செயலாளா் முத்துவேல் ராமசுவாமி தலைமை வகித்தாா். முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷன்ஸ் இயக்குநா் (கல்வி)இரா.செல்வகுமரன், முத்தாயம்மாள் கலை அறிவியியல் கல்லூரி முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், நிா்வாக புலமுதன்மையா் எம்.என்.பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்கள் வழங்கிய தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளா் முனைவா் எம்.சௌந்தரராஜன் பேசுகையில், ‘ஆசிரியப் பணியே அறப்பணி. முழு மன நிறைவுடன் ஆசிரியப்பணி ஆற்ற வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

இவ்விழாவில் இளநிலை கல்வியியல் மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பின்னா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT