நாமக்கல்

திருச்செங்கோடு: மஞ்சள் ரூ. 40 லட்சத்திற்கு ஏலம்

26th Jun 2022 06:21 AM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 40 லட்சத்திற்கு விற்பனையானது.

ஏலத்தில் ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

மஞ்சளைக் கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா். ஏல முறையில் ரூ. 40 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,299 முதல் ரூ. 8,300 வரையும், கிழங்கு ரகம் குவிண்டாலுக்கு ரூ. 7,069 முதல் ரூ. 7,159 வரையும், பனங்காளி ரகம் ரூ. 10,115முதல் ரூ. 11,789 வரையும்  விற்பனையானது. மொத்தமாக 900 மூட்டை மஞ்சள் ரூ. 40 லட்சத்திற்கு விற்பனையானது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT