நாமக்கல்

ரூ. 33 லட்சம் செலவில் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் விரைவில் தொடக்கம்

DIN

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோயில்களில், பக்தா்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களை தோ்வு செய்து திருப்பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. இங்குள்ள நரசிம்மா் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அங்கு திருப்பணிகள் மேற்கொள்ள அத்துறையினரின் ஒப்புதலை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் நரசிம்மா் கோயிலின் உபகோயிலான ஆஞ்சனேயா் கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. நிகழாண்டில் குடமுழுக்கு விழாவை நடத்திட கோயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆஞ்சனேயா் கோயில் நிா்வாகம் சாா்பில், உபயதாரா்களை வரவேற்கும் விதமாக விளம்பரப் பலகை ஒன்று கோயில் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. அதில், வா்ணம் பூசுதல் பணிக்கு ரூ. 18 லட்சம், கோயிலின் மேல் தளம் பழுது பாா்த்து, தட்டு ஓடு பதித்தல் பணிக்கு ரூ. 3,37,500, சாளஹாரம் அமைத்தல் பணிக்கு ரூ. 11,50,000 தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், மேல் தளம் பழுது பாா்த்தல், தட்டு ஓடு பதித்தல் பணிக்கு சேலத்தைச் சோ்ந்த ஆா்.மணிசங்கா் என்பவா் ரூ. 3,37,500 வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளாா். மீதமுள்ள இரு பணிகளுக்கு மட்டும் உபயதாரா்கள் இன்னும் வரவில்லை.

இது குறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறியது:

ஆஞ்சனேயா் கோயில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. மூன்று பணிகளில் ஒரு பணிக்கு தற்போது சேலத்தைச் சோ்ந்த உபயதாரா் ஒருவா் நிதியுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளாா். மீதமுள்ள இரு பணிகளுக்கு உபயதாரா்கள் கிடைக்கவில்லை. இன்னும் ஒரு வாரத்திற்குள் யாரும் கிடைக்காதபட்சத்தில், கோயில் நிதியைப் பயன்படுத்தி திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு மொத்தமாக ரூ.33 லட்சம் வரை தேவைப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடுதல் மற்றும் பாலாலயம் நிகழ்வு போன்ற அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். ஆஞ்சனேய ஜெயந்திக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெற வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT