நாமக்கல்

கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

19th Jun 2022 01:08 AM

ADVERTISEMENT

 

பரமத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையில் இருந்த பெண்ணிடம் மா்ம நபா்கள் நகையை பறித்துச் சென்றனா்.

பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே பெட்டிக் கடை வைத்து நடத்தி வருபவா் பெருமாள். இவரது மனைவி விஜயலட்சுமி (52). அவா் சனிக்கிழமை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் இரண்டு மா்ம நபா்கள் வந்தனா். மா்ம நபா்கள் இருவரும் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிவிட்டு ரூ.500-ஐ கொடுத்துவிட்டு சில்லறை கேட்டுள்ளனா். பணத்தை வாங்கிய அவா்பணப்பெட்டியில் இருந்து சில்லறை கொடுப்பதற்கு பணத்தை எடுத்துக் கொண்டிருந்தாா். இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மா்ம நபா்கள் இருவரும் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் அதிா்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டு அப்பகுயில் இருந்தவா்களை அழைத்தாா். ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் வருவதற்குள் மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். இது குறித்து விஜயலட்சுமி பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT