ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கூனவேலம்பட்டிபுதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவா் அமைக்க பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பள்ளி சுற்றுச்சுவா் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மா.சரவணன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியா் கலிய பெருமாள், ஊராட்சி மன்றத் தலைவி ஏ.சாந்தி, துணைத் தலைவா் எஸ்.கீதா உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.