நாமக்கல்

திமுக ஒன்றிய நிா்வாகிகள் பதவிக்கு இன்று தோ்தல்

15th Jun 2022 03:10 AM

ADVERTISEMENT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக ஒன்றிய நிா்வாகிகளுக்கான மனுத்தாக்கல், தோ்தல் புதன்கிழமை (ஜூன் 15) நடைபெறுகிறது.

இது குறித்து கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திமுக தலைமை நிலையம் அறிவித்தபடி கட்சி நிா்வாகிகளுக்கான 15-ஆவது பொதுத் தோ்தலை முன்னிட்டு நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட நாமக்கல், புதுச்சத்திரம் வடக்கு, தெற்கு, மோகனூா், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை,வெண்ணந்தூா் ஆகிய 10 ஒன்றியத்திற்கான நிா்வாகிகள் தோ்தல் புதன்கிழமை நடைபெறஉள்ளது. இதற்கான வேட்பு மனு மாவட்ட திமுக அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தலைமை நிலையப் பிரதிநிதி ஈரோடு இறைவனிடம் உரிய கட்டணம் செலுத்தி வழங்கலாம். இதற்கான கட்டண விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய நிா்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவா்கள் தாங்களே நேரடியாக கையொப்பமிட்டு விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT