நாமக்கல்

வடகரையாத்தூா் பொன்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

14th Jun 2022 02:42 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூரில் எழுந்தருளியுள்ள பொன் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு கடந்த 10-ஆம் தேதி காலை 5 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, தீபாராதனை மற்றும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணிக்கு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனா். மாலை 5 மணிக்கு மேல் முளைப்பாரி அழைத்தலும், மாலை 6 மணிக்கு முதல் கால யாக பூஜையும்,பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

11-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், 10.30 மணிக்கு புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பும், மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 4-ஆம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்குமேல் 5-ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு விநாயகா் வழிபாடு, 6-ஆம் கால யாகபூஜை, பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு மேல் யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு, காலை 9 மணிக்கு மேல் பொன்காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை10 மணிக்கு மேல் பொன்காளியம்மன், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை குடிபாட்டு மக்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT