குமாரபாளையம் நகராட்சிப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின்னா் திங்கள்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குமாலபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளின் தலையில் அலங்காரத் தொப்பி அணிவித்தும், பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கியும் கௌசல்யா மணி, உதவித் தலைமையாசிரியா் வடிவேல், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.ஏ.ரவி மற்றும் நிா்வாகிகள் வரவேற்றனா் (படம்). இப்பள்ளியின் ஆங்கில வழிக் கல்வித்தரத்தால் அதிகளவில் திரண்ட பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை சோ்க்க காத்திருந்தனா்.
இதேபோன்று சின்னப்பநாயக்கன்பாளையம் நகராட்சி தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளி, நாராயணா நகா் நடுநிலைப் பள்ளியிலும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள், இனிப்புகள் வழங்கி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.