நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பாச்சல் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்புகளை பாம்பு பிடிக்கும் தொழிளாளா் பிடித்து அகற்றினாா்.
பாச்சல் ஊராட்சி பகுதியில் ஓங்காளியம்மன் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனை சுற்று அதிக அளவிலான முட்புதா்கள், விவசாய கிணறுகள் உள்ளன. இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இரு சாரை பாம்புகள் சுமாா் நான்கு மணி நேரமாக நடனமாடியபடி இருந்தன. இதனை பாா்த்த அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா். இதனையடுத்து ராசிபுரம் வனத்துறை, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் யாரும் வராததால், பாம்பு பிடிக்கும் தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டனா். இதனையடுத்து நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் இரு பாம்புகளும் பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனா்.