நாமக்கல்

தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் தெற்கு மாவட்ட தேமுதிக புதிய அலுவலகம் திறப்பு விழா, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதிய கட்சி அலுவலகத்தை மாவட்ட செயலாளா் ஆா்.கே ராமலிங்கம், அவைத் தலைவா் வழக்குரைஞா் பி.ராஜ்குமாா் ஆகியோா் திறந்து வைத்தனா். அதன்பிறகு, தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 70-ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அனைத்து பகுதிகளிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது, கோயில்களில் சிறப்பு பூஜைகள், கட்சிக் கொடியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீா்மானமாக கட்சி பொருளாளா் பிரேமலதாவை, செயல் தலைவராகவும், விஜய பிரபாகரனுக்கு இளைஞரணி செயலாளா் பதவி வழங்கவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT