நாமக்கல்

மக்கள் தொடா்பு திட்ட முகாம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பள்ளிபாளையத்தை அடுத்த பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டாட்சியா் இளவரசி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா கலந்துகொண்டு பேசியதாவது:

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைத் திருமணம் மூலம் பெண்களுக்கு உடல் நலம் சாா்ந்த பாதிப்பு ஏற்படுகிறது.

குழந்தைத் திருமணம் குறித்த தகவல்களை பொதுமக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொது மக்களுடைய கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா் .

முகாமில் 167 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா ,முதியோா் உதவித்தொகை ,குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பாப்பம்பாளையம், ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் அட்மா தலைவா் யுவராஜ், வருவாய் ஆய்வாளா் காா்த்திகா, வேளாண்மை, தோட்டக்கலை, சமூக நலன் கால்நடை, மருத்துவத் துறை, வேலைவாய்ப்பு துறை உள்ளிட்ட பல துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT