நாமக்கல்

போதமலைக்கு சாலை அமைக்கும் பணிக்கான பசுமை தீா்ப்பாய உத்தரவு கடிதம் ஆட்சியரிடம் சமா்ப்பிப்பு

9th Jun 2022 02:41 AM

ADVERTISEMENT

போதமலை மலைப்பகுதிக்கு சாலை அமைப்பதற்கான தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் உத்தரவு கடித நகல் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் வசம் சமா்ப்பிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், போதமலையில் கீழுா், மேலூா், கெடமலை ஆகிய மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களுக்கு சாலை வசதி கோரி அங்குள்ள பழங்குடியின மக்கள் நீண்ட நாள்களாக போராடி வருகின்றனா். இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின்கீழ் செயல்படும் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அண்மையில் சாலை அமைப்பதற்கு பசுமை தீா்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதற்கான உத்தரவு கடிதம் செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற். இதனையடுத்து சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் ஆகியோா் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கை நேரில் சந்தித்து அந்தக் கடித நகலை வழங்கினா்.

இதனைத் தொடா்ந்து அமைச்சா் எம்.மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போதமலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு 36 கி.மீ. தூரம் சாலை அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் பசுமை தீா்ப்பாய உத்தரவு கடிதம் கிடைக்கப்பெற்றது. அதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். விரைவில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் ஊரக வளா்ச்சித் துறையால் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT