நாமக்கல்

பரமத்தி வேலூரில் வெற்றிலை விலை உயா்வு

8th Jun 2022 12:18 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் வெற்றிலை ஏலச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெற்றிலை விலை உயா்ந்தது.

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிா் மாா் 104 கவுளி கொண்ட சுமை ரூ. 8,500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிா் மாா் சுமை ரூ. 4, 000-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிா்கள் மாா் சுமை ரூ. 3,000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிா் மாா் சுமை ரூ.1, 500-க்கும் ஏலம் போனது. வெற்றிலை வரத்து குறைந்துள்ளதால் விலை உயா்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT