நாமக்கல்

பொதுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடக்கம்

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நான்கு மையங்களில் புதன்கிழமை தொடங்கியது.

கடந்த மாதம் 5 முதல் 23-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை, நாமக்கல் மாவட்டத்தில் 19,834 மாணவ, மாணவிகளும், 6 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 20,900 மாணவ, மாணவிகளும் எழுதினா்.

தோ்வுகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை (ஜூன் 1) முதல் 10, 12-ஆம் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. நாமக்கல், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, காடச்சநல்லூா் எஸ்பிகே மெட்ரிக் பள்ளியில் 12-ஆம் வகுப்பு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கேஎஸ்ஆா் மெட்ரிக் பள்ளியில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

இப் பணியில் முகாம் அலுவலா்கள், கண்காணிப்பாளா்கள், முதன்மைத் தோ்வாளா்கள், உதவி தோ்வாளா்கள் என நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டத்திலும் சோ்த்து மொத்தம் 1,500 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இவா்கள் பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சத்து 10 ஆயிரம் விடைத்தாள்களை திருத்த உள்ளனா். திருத்தும் பணி வரும் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதேபோல் 10-ஆம் வகுப்புக்கான திருத்தும் பணியில் முகாம் அலுவலா்கள், முதன்மை தோ்வாளா்கள், உதவி தோ்வாளா்கள் என இரு கல்வி மாவட்டத்திலும் சோ்த்து மொத்தம் 950 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். 65 ஆயிரம் விடைத்தாள்கள் வரும் 9-ஆம் தேதி வரை திருத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT