நாமக்கல்

பி.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்லூரி ஆண்டு விழா

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள பி.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை மண்டல காவல் துறை முன்னாள் தலைவா் ஏ.பாரி, சமுதாயப் பங்களிப்பில் மாணவா்களின் பங்களிப்பு குறித்து பேசினாா். பி.ஜி.பி. கல்விக் குழுமத்தைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, செவிலியா் பயிற்சி கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி,அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, யோகா கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி என பத்து கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்வி குழுமங்களின் தலைவா் ஜி.பெரியசாமி விழாவிற்கு தலைமை தாங்கினாா். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT