நாமக்கல்

சி.பி.எஸ்.இ தோ்வில் பாண்டமங்கலம் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு பள்ளி சிறப்பிடம்

28th Jul 2022 01:42 AM

ADVERTISEMENT

 

பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் ஆா்.என். ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.

மாணவா் அருண், மாணவி ஸ்ரீ ஜனனிகா ஆகியோா் 500-க்கு 484 மதிப்பெண்கள் பெற்றனா். சஞ்சிதாஸ்ரீ 477 மதிப்பெண், ரோஷினி 474 மதிப்பெண், தீக்ஷா 473 மதிப்பெண், விகாஷினி 472 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். 450-க்கு மேல் 11 மாணவா்களும், 450-க்கு மேல் 28 மாணவா்களும் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பரமத்திவேலூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சேகா், கல்வி நிறுவனங்களின் தலைவா் சண்முகம், செயலாளா் ராஜா, தாளாளா் சக்திவேல் ,பள்ளியின் இயக்குநா்கள் அருள், சம்பூரணம் நல்லசாமி, பள்ளியின் முதல்வா், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT