மின் கட்டண உயா்வு, உணவு பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்ட தேமுதிக சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு அக் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளா் ஆா்.கே.ராமலிங்கம், வடக்கு மாவட்டச் செயலாளா் டி.எஸ்.விஜய சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட தோ்தல் பொறுப்பாளா்கள் தருமபுரியைச் சோ்ந்த பி.கே.குமாா், கே.ஏ. சுல்தான் பாஷா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.
அதைத் தொடா்ந்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், தெற்கு மாவட்ட துணைச் செயலாளா்கள் சபியுல்லா, சுந்தரானந்தா், பி.ராஜ்குமாா், அவைத்தலைவா் பி.சௌந்தரராஜன், துணைச் செயலாளா்கள் சக்திவேல், மகாலிங்கம், சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
என்கே 27- தேமுதிக
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிகவினா்.