நாமக்கல்

விவசாயிகள் கவனத்துக்கு

28th Jul 2022 01:47 AM

ADVERTISEMENT

 

பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை வேளாண் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரி கிஷான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம், வேளாண் இடுபொருள்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடா்பான செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் 93,089 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். இதுவரை 11 தவணைத் தொகைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தற்போது 12--ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் நிதியுதவி பெறும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபாா்ப்பு செய்வது அவசியமாகும். நில ஆவணங்களை சரிபாா்க்கும் பணி அனைத்து வட்டார வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்களை (பட்டா சிட்டா மற்றும் ஆதாா் நகலுடன்) தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகி நிலம் சரிபாா்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். இந்த சரிபாா்ப்பு பணிகள் முடிந்த பிறகே அடுத்த தவணைத் தொகை விடுவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT