நாமக்கல்

பரமத்திவேலூரில் ரூ. 1.46 லட்சத்து தேங்காய் ஏலம்

27th Jul 2022 03:45 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. 6 ஆயிரத்து 112 கிலோ தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. அதிகபட்சமாக கிலோ ரூ. 27.59 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.39 - க்கும், சராசரியாக ரூ. 24.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 46 ஆயிரத்து 333 -க்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT