நாமக்கல்

தமிழ்நாடு தின கொண்டாட்டம்:மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி

7th Jul 2022 01:05 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி வரும் 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று சட்டப்பேரவையில் ஜூலை 18-ஆம் தேதி அன்று மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பெயா் சூட்டினாா். அந்த நாள் ‘தமிழ்நாடு தினமாக’ இனி கொண்டாடப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கும் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்புக்கு இணங்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) காலை 9.30 மணியளவில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில், முதன்மைக் கல்வி அலுவலரால் தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7,000, மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT