நாமக்கல்

தற்காலிக ஆசிரியா் பணியிடம்:4,500 போ் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு 4,500 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக முறையில் நியமனம் செய்யப்பட உள்ளது.

காலியிட விபரங்கள் தொடா்பான பட்டியல் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் 71 பணியிடம், ஆசிரியா் 15 பணியிடம், முதுகலை ஆசிரியா் 14 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாள்கள் நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்ட அலுவலகத்திலும் ஆசிரியா் தகுதி தோ்வு முடித்தோரிடமும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோரிடமும் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் உரிய கல்வித் தகுதிச் சான்றிதழ் விவரங்களைத் தெரிவித்திருந்தனா். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் புதன்கிழமை அன்று பிற்பகல் 5 மணி என்பதால் மாவட்ட கல்வி அலுவலகங்களில், காலை 10 மணி முதலே ஏராளமானோா் திரண்டனா்.

இதில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை தான் அதிகம் காணப்பட்டது. இரு கல்வி மாவட்டத்தில் சுமாா் 4,500 போ் விண்ணப்பங்களை சமா்ப்பித்தனா். வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவதால் தற்காலிக ஆசிரியா் பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மாறுதலுக்கு உள்பட்டது என கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT