நாமக்கல்

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

7th Jul 2022 01:07 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 8) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும்-தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.

ADVERTISEMENT

இந்த மாதத்துக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே, தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையானவா்களை அவா்களது நிா்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தோ்வு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT