நாமக்கல்

உள்ளாட்சி இடைத்தோ்தல்:டாஸ்மாக் கடைகள் 4 நாள்களுக்கு விடுமுறை

7th Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறும் பகுதிகளில் நான்கு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தல்கள் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் அதனைச் சுற்றிலும் 5 கி.மீ தொலைவிற்கு உள்பட்ட அரசு மதுபான கடைகள் மற்றும் மது கூடங்கள் ஜூலை 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் 9-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான 12-ஆம் தேதியன்றும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

மேற்கண்ட நாள்களில் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களைத் திறந்தாலோ, மது வகைகளைத் திறந்து மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT