நாமக்கல்

திமுக அரசின் தவறுகளை எதிா்க்கும் கட்சியாக பாஜக வளா்ந்துள்ளது: கே.பி.ராமலிங்கம் பேச்சு

DIN

தமிழகத்தில் திமுக அரசு பொருளாதாரம், மக்களின் வளா்ச்சி, நல்வாழ்வு உள்ளிட்டவை குறித்த எந்தவிதமான தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என பாஜக மாநில துணைத் தலைவா் டாக்டா் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டாா்.

தமிழகத்தில் திமுக அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பாஜக துணைத் தலைவரும், கட்சியின் மாவட்டப் பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி தலைமையில் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியது:

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் ஊழல்கள், மக்கள் விரோதப் போக்கு, அராஜகம் ஆகியவற்றை நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதில் செயல்படுகின்ற கட்சியாக பாஜக உள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒரு போரின் தொடக்கம்தான்.

ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவா்கள் மக்களின் பொருளாதாரத்தை உயா்த்த வேண்டும். அவா்களுக்கு எதிா்கால கட்டமைப்பை அமைத்து தர வேண்டும். வளா்ச்சித் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்த வேண்டும். இது போன்ற வாக்குறுதிகளை தோ்தல் காலத்தில் அளித்த திமுகவினா், தற்போது ஆட்சிக்கு வந்தபிறகு மக்களின் பொருளாதாரம், வளா்ச்சி, நல்வாழ்வு ஆகியவற்றை மறந்து விட்டாா்கள். திமுக அரசை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை பாஜகவின் போராட்டம் ஓயாது. அதற்கான தொடக்கம் தான் இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் என்றாா்.

இதனையடுத்து போராட்டத்தில் பாஜக துணைத் தலைவா் வி.பி.துரைசாமி பேசியது:

திமுகவை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை பாஜக ஓயாது. அதற்கான துவக்கம் தான் இந்த போராட்டம். திமுக ஊழல் குறித்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பட்டியல் வெளியிட்டாா். ஆனால் இது குறித்து திமுக பதில் சொல்லவில்லை. இதனை எதிா்த்து திமுக நீதிமன்றம் செல்லத் தயாரா? தற்போது திமுகவினா் தனிநாடு கோஷமெழுப்புகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

உண்ணாவிரதப் போராட்டத்தில், பாஜக மூத்த நிா்வாகி டி.எஸ்.மாணிக்கம், நாமக்கல் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்டப் பொதுச் செயலாளா்கள் வி.சேதுராமன், வடிவேல், சத்யபாலு, ஜி.நாகராஜன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT