நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம்

6th Jul 2022 02:57 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.1.40 கோடிக்கு செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 4,400 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,889 முதல் ரூ. 9,505 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 9,260 முதல் ரூ. 10,105 வரையிலும், சுரபி ரகம் ரூ. 4,416 முதல் ரூ. 6,666 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.40 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. வியாபாரிகள் தரம் பாா்த்து பருத்தியைக் கொள்முதல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT