நாமக்கல்

நலவாரிய மனுக்களை நேரடியாகப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 02:52 AM

ADVERTISEMENT

இணையவழி பதிவுக்கு மாற்றாக நலவாரிய மனுக்களை நேரடியாகப் பெற வேண்டும் என இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் எம்.அசோகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இணையவழி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதலில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நலவாரிய மனுக்களை நேரடியாக அதிகாரிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளில் இருந்து நிலுவைத் தொகையுடன் மாத ஓய்வூதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் விபத்து மரணம் ரூ. 5 லட்சம், இயற்கை மரணம் ரூ. 2 லட்சம், ஈமச்சடங்கு நிதியாக ரூ. 2,500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் பலா் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT