நாமக்கல்

பாவை பொறியியல் கல்லூரி மாணவருக்கு பன்னாட்டு நிறுவனத்தில் பணிவாய்ப்பு

5th Jul 2022 03:06 AM

ADVERTISEMENT

பாவை பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவா் கே.பூவரசன் பன்னாட்டு நிறுவனமான ஆல்டியோஸ்டாா் நிறுவனத்தில் ஆண்டு ஊதியம் ரூ.12 லட்சம் என்ற அடிப்படையில் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பாவை பொறியியல் கல்லூரி மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் வேலைவாய்ப்பிற்கு தனி பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் இக்கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் பல்வேறு நிறுவனங்களின் பணி வாய்ப்பு பெற்று வருகின்றனா். இக்கல்லூரி மாணவா் கே.பூவரசன், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஊதியத்தில் பன்னாட்டு நிறுவனமான ஆல்டியோஸ்டாா் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றுள்ளாா். இவா் அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், இயக்குநா் (நிா்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநா் (மாணவா் நலன்) அவந்தி நடராஜன், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் எம்.பிரேம்குமாா், தகவல் தொழில்நுட்பத்துறை துறைத்தலைவா் பி.வெங்கடேசன், முதன்மையா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் அந்த மாணவரைப் பாராட்டினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT