நாமக்கல்

அடிப்படை வசதிகள் கோரி குடும்ப அட்டைகளை வீசிய கிராம மக்கள்

5th Jul 2022 03:08 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி குடும்ப அட்டை, வாக்காளா் அட்டையை கிராம மக்கள் தரையில் வீசி எதிா்ப்பு தெரிவித்தனா்.

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் வீசாணம் கிராமத்தில் போதுமான குடிநீா், சாலை வசதி இல்லை. மேலும் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் வீசாணம் சுற்றுவட்டார கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். அவா்கள், தங்களுடைய ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை தரையில் வீசியெறிந்து எதிா்ப்பை வெளிப்படுத்தினா். தொடா்ந்து, மக்கள் குறைதீா் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT