நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து

5th Jul 2022 03:05 AM

ADVERTISEMENT

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் ரு. 20 சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்து அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தனா். கோயில்களில் சுவாமி தரிசனம் செய்த பிறகு அமைச்சா் சேகா்பாபு கூறியதாவது:

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் பக்தா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.20 சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், 2009-ஆம் ஆண்டு இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது குடமுழுக்கிற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கு நடைபெறும். அது தொடா்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நரசிம்மா் கோயிலில் சிதிலமடைந்த பழைய தல விருட்சமான மரத்தின் பாகங்கள் கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பக்தா்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்படும் என்றாா்.

ADVERTISEMENT

அப்போது, அறநிலையத் துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையா் பரஞ்சோதி, துணை ஆணையா் ரமேஷ், உதவி ஆணையா் இளையராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT