நாமக்கல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை ராஜகோபுர கும்பாபிஷேகம்:பொன்னா், சங்கா் சகோதரா்கள் அழைப்பு

5th Jul 2022 03:06 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் வரும் புதன்கிழமை காலை நடைபெறுகிறது. விழாவில் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கிழக்கு வாசல் ஏழுநிலை ராஜகோபுர உபயதாரா்களான பரமத்திவேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றை சோ்ந்த பொன்னா், சங்கா் சகோதரா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் புதன்கிழமை (6-ஆம் தேதி) நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு 3- ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மேல் கும்ப அலங்காரம், கடஸ்தாபனம், முதற்கால யாக பூஜையும் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும்,மாலை 5.30 மணிக்கு மேல் புண்ணியாகவாசனம், மூன்றாம் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து புதன்கிழமை காலை 4.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜையும், காலை 6 மணிக்கு மகாபூா்ணாஹுதி, யாத்ரா தானம் மற்றும் கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. 6.45 மணிக்கு சமயபுரம் மாரியம்மன் கோயில் நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கிழக்கு வாசல் ஏழுநிலை ராஜகோபுர உபயதாரா்களான பரமத்திவேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றைச் சோ்ந்த பொன்னா், சங்கா் சகோதரா்கள் இந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பக்தா்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற அழைப்பு விடுத்துள்ளனா். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலா் மற்றும் தக்காா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT