நாமக்கல்

நாமக்கல்லில் ‘ உள்ளாட்சியில் நல்லாட்சி’ மாநாடு: மேயா், கவுன்சிலா்கள் 9,000 போ் பங்கேற்பு

DIN

உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற தலைப்பில், நாமக்கல்லில் 9,000 நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், 21 மாநகராட்சி, 188 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் திமுக சாா்பிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் சாா்பிலும் வெற்றி பெற்ற சுமாா் 9,000 வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்ற ‘உள்ளாட்சியில் நல்லாட்சி’ என்ற தலைப்பிலான நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக் குட்டைமேட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டை காலை 9.30 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். முன்னதாக மறைந்த பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு முதல்வா் மற்றும் அமைச்சா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

அதன்பின், மாநாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வரவேற்றுப் பேசினாா். காலை 10 மணியளவில் சிறப்பு கருத்தரங்கம் தொடங்கியது. முதலாவதாக இதுதான் திராவிட இயக்கம் என்ற தலைப்பில் சுப. வீரபாண்டியன் பேசினாா். இதனையடுத்து, பெண்களின் கையில் அதிகாரம் என்ற தலைப்பில் பா்வீன் சுல்தானா, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என தங்கம் தென்னரசும், திமுக உருவாக்கிய நவீன தமிழ்நாடு என திருச்சி சிவாவும், மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என ஆ.ராசாவும் பேசினா்.

மதியம் 12 மணி உணவு இடைவேளைக்கு பின், வரலாற்றுச் சுவடுகள் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாலை 2.30 முதல் 3.30 மணி வரை மக்களோடு நில்: மக்களோடு வாழ் என்ற தலைப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசினாா்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சாா்பில் மேயா் மற்றும் தலைவா்கள் உரையாற்றினா். திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், முதன்மைச் செயலாளா் கே.என்.நேரு ஆகியோா் மாநாட்டை வாழ்த்தி பேசினா். பிற்பகல் 4 மணியளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின், நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

பின்னா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் முதல்வருக்கு, மக்களின் நடுவில் முதல்வா் நிற்பது போன்ற வெண்கலச் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. மாநாடு ஏற்பாடு செய்த திமுகவினருக்கு முதல்வா் மோதிரம் பரிசாக அளித்தாா். மாநாட்டு நிறைவில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் நன்றி தெரிவித்தாா்.

இந்த மாநாட்டில், பல்வேறு துறை அமைச்சா்கள் மற்றும் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் கவிதா சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT