நாமக்கல்

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் அமைச்சா்கள் திடீா் ஆய்வு

DIN

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வணிகவரித் துறை அமைச்சா் மூா்த்தி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் 28 அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் வந்திருந்தனா். பிற்கல் 5 மணிக்கு மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அமைச்சா்கள் பலா் தங்களுடைய சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வணிகவரித்துறை அமைச்சா் மூா்த்தி ஆகியோா் ஆஞ்சனேயா் கோயிலுக்கு வந்தனா். அவா்கள் அங்குள்ள சுற்றுப் பிரகாரத்தை ஆய்வு செய்தனா். மேலும், கோயில் திருப்பணி தொடா்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜாவிடம் கேட்டறிந்தனா். பின்னா் நரசிம்மா் கோயிலுக்குச் சென்ற அவா்கள் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பாா்வையிட்டனா். பக்தா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனா்.

ஆஞ்சனேயரை தரிசித்த உள்ளாட்சிப் பிரதிநிதிகள்: மாநாட்டுக்காக வந்த பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புகையில் ஆஞ்சனேயா், நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து விட்டுச் சென்றனா். இதனால் அக்கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT