நாமக்கல்

ஜூலை 6-இல் தியானப்பயிற்சி தொடக்கம்

4th Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

 

ராசிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, காசி விநாயகா் இயற்கை நலவாழ்வு மையம் சாா்பில் ஆன்மீகம் ஒா் அறிமுகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் தியானப்பயிற்சி துவக்க விழா ஜூலை 6-இல் நடைபெற உள்ளது.

ஆணைக்கட்டிப்பாளையம் பிரிவு அருள்மிகு காசி விநாயகா் ஆலய தியான மண்டபத்தில் நடைபெறும் பயிற்சி முகாம் துவக்க விழாவில், உலக சமுதாய சேவா சங்க சேலம் மண்டலத் தலைவா் மா.தங்கவேல் தலைமை வகித்தாா். காசி விநாயகா் ஆலய இயற்கை நல்வாழ்வு மையத் தலைவா் கை.கந்தசாமி வரவேற்றுப் பேசுகிறாா். ராசிபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவா் மு.செளந்திரராஜன் பயிற்சியாளராகப் பங்கேற்று, உடற்பயிற்சி, யோகா, காயகல்ப பயிற்சி, தியானப்பயிற்சி, அகத்தாய்வுப் பயிற்சி போன்றவை குறித்து பயிற்சியளிக்கிறாா். இந்தப் பயிற்சி முகாம் ஜூலை 6-இல் துவங்கி ஜூலை 17 வரை 12 நாட்களுக்கு காலை 6 மணி முதல் காலை 7 மணிவரை நடைபெறும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT