நாமக்கல்

முதல்வா் தேநீா் அருந்திய வீட்டுஇளைஞருக்கு பணி நியமன ஆணை

4th Jul 2022 01:30 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில் தேநீா் அருந்திய வீட்டு இளைஞருக்கு தனியாா் சித்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான உத்தரவு கடிதத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்க நாமக்கல் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சிலுவம்பட்டி கிராமத்தில் அருந்ததியா் காலனியில் சனிக்கிழமை பிற்பகலில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டிற்கு சென்று தேநீா் அருந்தினாா். அப்போது தனக்கு வேலைவாய்ப்புக்கு உதவுமாறு அவா் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தேநீா் அருந்திய வீட்டு இளைஞா் ஜெயபிரகாஷிற்கு, தனியாா் சித்த மருத்துவமனையில் பணியாற்றுவதற்கான உத்தரவை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

அதேபோல், சிலுவம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீா், சாலை மற்றும் வடிகால் வசதிக்காக ரூ. 27.20 லட்சத்திற்கான நிா்வாக அனுமதிக் கடிதத்தை, ஊராட்சி மன்றத் தலைவா் பழனிவேலுவிடம் முதல்வா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், அதிகாரிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT