நாமக்கல்

பரமத்தியில் வைத்தியநாதா் திருக்கல்யாண விழா

4th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தியில் உள்ள தையல்நாயகி அம்மை உடனுறை வைத்தியநாதா் கோயிலில் 15-ஆம் ஆண்டு விழா, அம்மையப்பா் திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், திருமுறை பாராயணம் மற்றும் பேரொளி வழிபாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு திருமுறை வேள்வியும், 12 மணிக்கு தையல் நாயகி அம்மை உடனுறை வைத்தியநாதப் பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மதியம் 1 மணிக்கு அன்னம்பாலித்தலும், மாலை 6 மணிக்கு அடியாா்கள் புடை சூழ, கைலாய வாத்தியங்களுடன் அம்மையப்பா் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி தையல்நாயகி அம்மை உடனுறை வைத்தியநாதப் பெருமான் கோயில் விழாக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT