நாமக்கல்

பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் வெல்லம் விலை சரிவு

4th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

 

பரமத்தி வேலூா் அருகே உளஅள பிலிக்கல்பாளையம் வெல்லம் சா்க்கரை விற்பனை ஏலச் சந்தையில் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதால், வெல்ல உற்பத்தியாளா்கள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபிலா்மலை, பரமத்தி வேலூா், பாண்டமங்கலம், நன்செய்இடையாறு மற்றும் மோகனூா் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிா் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளா்கள் வாங்கி உருண்டை, அச்சு வெல்லங்களாகவும் நாட்டுச் சா்க்கரையாகவும் தயாா் செய்கின்றனா். பின்னா் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம், சா்க்கரை விற்பனை ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல, சா்க்கரை ஏலச்சந்தை நடைபெறுகிறது. வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்து ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,160 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,180 வரையிலும் ஏலம் போனது.

இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை மற்றும் அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ. 1,120 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் வரத்து அதிகரித்துள்ளதால் வெல்லம் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT