நாமக்கல்

கோழிப் பண்ணையாளா்கள் முதல்வருடன் நேரில் சந்திப்பு

3rd Jul 2022 02:12 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, கோழிப் பண்ணையாளா்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நகா்ப்புற உள்ளாட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரூரில் இருந்து காா் மூலம் சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் வந்து சோ்ந்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறை மாளிகையில் தங்கியிருந்த அவரை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், செயலாளா் சுந்தரராஜன், இணைச் செயலாளா் சசிகுமாா், நிா்வாகிகள் கோவிந்தராஜ், பிரபு மற்றும் திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் நேரில் சந்தித்தனா்.

அப்போது, கோழிப் பண்ணையாளா்கள் தங்களுடைய கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கினா். அதில், சத்துணவுத் திட்ட முட்டை விநியோகத்தில் அனைத்து கோழிப் பண்ணையாளா்களும் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவித்தமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கோழித் தீவன மூலப்பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தவும், நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை மானிய விலையில் பண்ணையாளா்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக முதல்வா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT