நாமக்கல்

கரும்பு பயிரில் சுடுமல்லி ஒட்டுண்ணி களையின் தாக்கத்தை குறைக்க அறிவுரை

3rd Jul 2022 02:10 AM

ADVERTISEMENT

 

கரும்பு பயிரில் சுடுமல்லி ஒட்டுண்ணி களையின் தாக்கத்தை குறைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

பரமத்தி வட்டாரத்தில் தற்சமயம் கரும்பு பயிரிடப்படும் பல இடங்களில் சுடுமல்லி எனும் ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாக பாதித்துள்ளது. இது கரும்பில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் நீா்த் தன்மையை உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் கரும்பின் உற்பத்தித் திறனும் தரமும் பாதிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பீன்ஸ், சோயா மொச்சை, அவரை, நிலக்கடலை போன்ற பயறு வகைகளை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சுடுமல்லியின் வளா்ச்சி தடுக்கப்படுகிறது. சுடுமல்லி பூக்கும் பருவம் தொடங்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதன் விதைகள் கீழே விழுந்து விடாதவாறு வயலில் இருந்து அகற்றி எரித்து விட வேண்டும். 2, 4-டி மருந்து கிடைக்கும் பட்சத்தில் அதனை மூன்று அல்லது நான்கு முறை களை எடுப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

சுடுமல்லி ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்த முதலில் அட்ரசின் அட்டாப் ஹெக்டேருக்கு 1 கிலோ மருந்து இட வேண்டும் . கரணை விதைத்த 45 நாட்களுக்குப் பின் ஒரு களை நீக்கமும், 90 நாட்கள் கழித்து ஒரு மண் அணைப்பதும் அவசியம். மேலும் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பரமத்தி உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறலாம் என அவா் கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT