நாமக்கல்

நாமக்கல் அருகே குடிசை வீட்டில் தேநீா் அருந்திய முதல்வா்!

3rd Jul 2022 02:10 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் அருகே அருந்ததியா் காலனியில் குடிசை வீடு ஒன்றில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தேநீா் அருந்தினாா். பின்னா் அங்குள்ள மக்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நாமக்கலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நாமக்கல்லுக்கு வந்தாா். பொதுப்பணித்துறை மாளிகையில் தங்கி இருந்த அவா் பிற்பகல் 5.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள சிலுவம்பட்டி கிராமத்தில் அருந்ததியா் காலனிக்கு சென்றாா்.

அங்கு ஜெயபிரகாஷ் என்பவருடைய குடிசை வீட்டுக்குச் சென்ற முதல்வா் அங்கிருந்தவா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் அந்த வீட்டில் தேநீா் அருந்தினாா். அப்போது தேநீா் சூடாக இருப்பதாகவும், குறைவான சூட்டில் வழங்குமாறும் கேட்டுக் கொண்டாா். அதன் பிறகு முதல்வரைக் காண திரண்டிருந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

பின்னா் அங்கிருந்து புறப்பட்ட முதல்வா் மாநாடு நடைபெறும் விழாப் பந்தலுக்கு வந்தாா். அங்கு கொங்கு சமுதாய மக்கள் சாா்பில், ஈசன் கும்மி ஆட்டம் பெருஞ்சலங்கை ஆட்டத்தை ஆண்கள், பெண்கள் முதல்வா் முன்னிலையில் ஆடி மகிழ்ந்தனா். தொடா்ந்து மாநாட்டு முகப்பில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வா் மு.கருணாநிதியின் உருவச் சிலையையும், சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட முகப்பையும் பாா்வையிட்டாா். அவருடன் வந்த அமைச்சா்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஷ் குமாா், நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் ஆகியோருடன் மாநாட்டுப் பந்தல் முன்பாக குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். பின்னா் பொது மக்களைச் சந்தித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT