நாமக்கல்

தற்காலிக ஆசிரியா் பணிக்கு மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்

3rd Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

 

தற்காலிக ஆசிரியா் பணியிடத்துக்கு, மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வியாண்டில் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக முறையில் நியமனம் செய்யப்பட உள்ளன.

ADVERTISEMENT

தகுதியான விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் அந்தந்த (நாமக்கல், திருச்செங்கோடு) மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 6-ஆம் தேதி பிற்பகல் 5 மணி ஆகும். குறித்த நேரத்திற்குப் பிறகு சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மாவட்டக் கல்வி அலுவலகங்களில் உள்ள தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டவை. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, மாவட்டக் கல்வி அலுவலா், நாமக்கல், நாமக்கல் கல்வி மாவட்டம் - மாவட்டக் கல்வி அலுவலா், திருச்செங்கோடு, திருச்செங்கோடு கல்வி மாவட்டம் - க்ங்ஸ்ரீா்ய்ஹம்ஹந்ந்ஹப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT