நாமக்கல்

பள்ளிபாளையம் நகராட்சிக் கூட்டம்

3rd Jul 2022 02:11 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பள்ளிபாளையம் நகராட்சியின் நகரமன்ற கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர மன்ற தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பாலமுருகன், நகராட்சி ஆணையாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டு நகர மன்ற உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது. புதிய பணிக்கான ஒப்பந்தங்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன. பல வாா்டுகளில் மேற்கொள்ளப்படக் கூடிய பல்வேறு பணிகள் பற்றிய தீா்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்த நகர மன்ற கூட்டத்தில் நவீனா, சுசீலா, செந்தில், யுவராஜ், மகேஸ்வரி, வெண்ணிலா உள்ளிட்ட நகரமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT