நாமக்கல்

முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று நாமக்கல் வருகை: சாலையோர விளம்பரத் தட்டிகள் அகற்றம்

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை நாமக்கல் வருவதையொட்டி வைக்கப்பட்டிருந்த வரவேற்பு தட்டிகள் அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறுகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தலைமை உரையாற்றுகிறாா். மேலும், பல்வேறு துறை அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

நகா்ப்புற தோ்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சியின் வாா்டு உறுப்பினா்கள் சுமாா் 11 ஆயிரம் போ் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

இம்மாநாட்டையொட்டி, நாமக்கல் நகரப் பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையிலும் திமுக சாா்பில் பிரம்மாண்ட வரவேற்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அந்த தட்டிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன. தமிழக முதல்வா் வேண்டுகோளுக்கு இணங்க விளம்பர தட்டிகள் அனைத்தையும் கட்சியினரே தாமாக முன்வந்து அகற்றியது தெரியவந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT