நாமக்கல்

பண்ணைகளில் தீவனச் சிதறல்களைத் தவிா்க்க வேண்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

DIN

கோழிப் பண்ணைகளில் ஈக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தீவனச் சிதறல்களைத் தவிா்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 டிகிரி மற்றும் 72.5 டிகிரியாக நிலவியது. கடந்த 3 நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை.

அடுத்த 4 நாள்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழை மாவட்டத்தின் சில இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 96.8 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். தென் மேற்கிலிருந்து மணிக்கு 10 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.

சிறப்பு ஆலோசனை:

கோழிப் பண்ணைகளில் ஈக்களின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்ப வெப்பநிலை நிலவுகிறது. அதனால் ஈக்களின் தொல்லை அதிகமாகியுள்ளது. அவற்றை கண்காணித்து அதற்கு ஏற்ப கட்டுப்படுத்துதல் முறைகளை கையாளுவது மிகவும் சிறந்ததாகும். கோழிப் பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கையை கண்காணிக்க ஸ்பாட் காா்டை பயன்படுத்தலாம். பண்ணைகளில் தண்ணீா் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த குடிநீா் குழாய்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவனச் சிதறல்களைத் தவிா்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT