நாமக்கல்

நாமக்கல்லில் மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் தொழிற்பூங்கா அமைக்க அரசுக்கு வலியுறுத்தல்

1st Jul 2022 02:04 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்லில், சரக்கு போக்குவரத்துத் தொழிலுக்கு ஏற்றவாறு மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில், தாலுகா லாரி உரிமையாளா் சங்கத்தின் 49-ஆவது மகாசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஆா். வாங்கிலி தலைமை வகித்தாா். இதில், நாமக்கல்லில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை விரைவாக நிறைவேற்ற வேண்டும். தொழில் நகரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஏற்படுத்த வேண்டும். நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். அகில இந்திய அளவில் லாரிப் போக்குவரத்துத் தொழிலில் நாமக்கல் முன்னிலை வகிப்பதால், இங்கு மோட்டாா் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்பூங்கா உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சங்க செயலாளா் அருள், பொருளாளா் சீரங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT