நாமக்கல்

திருச்செங்கோட்டில் இன்று மாணவா்கள் உயா் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

1st Jul 2022 02:04 AM

ADVERTISEMENT

 

திருச்செங்கோட்டில், மாணவ, மாணவிகளின் உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த 25-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான, உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு என்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சியானது நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு எளையாம்பாளையம், விவேகானந்தா கல்வி நிறுவனத்தில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் துறை வாரியாக நடைபெற உள்ளது. இதில், பொறியியல், மருத்துவம், அறிவியல் தொடா்புடைய துறைகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை மற்றும் மீன்வளம், அரசுப் பணிகள், வங்கிக் கடன், உதவி மற்றும் உதவித் தொகை, அனைத்து வகை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள், பெற்றோா் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT