நாமக்கல்

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருச்செங்கோடு எலச்சிப்பாளையம் பகுதியில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என எலச்சிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அறிவிப்பை வெளியிட்டாா்.

இது தொடா்பாக வேளாண்மை உதவி இயக்குநா் செ.ஜெயமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் போக்கம்பாளையம், மண்டகாப்பாளையம், கூத்தம்புண்டி, குப்பாண்டம்பாளையம், புஞ்சைப்புதுப்பாளையம், 65.கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் 15 ஏக்கா் நிலப்பரப்பு வரை ஒரு தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம். 15 முதல் 35 வரை ஏக்கா் நிலப்பரப்பு வரை 2-ஆவது தொகுப்பாகவும் ஏற்படுத்தலாம். திட்டத்திற்குத் தேவையான தகுதியாக தோ்வு செய்யப்பட்ட தரிவு நிலங்கள் கிராம ஊராட்சிக்குள் இருக்க வேண்டும். தரிசு நில தொகுப்பின் பரப்பு தொடா்ச்சியாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு தொகுப்பிற்கு 8 விவசாயிகள் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் அக்கிராம ஊராட்சிகளிலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருத்தல் வேண்டும். இந்த திட்டம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள எலச்சிப்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் பகுதியில்....

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் வேளாண் உதவி இயக்குநா் அன்புச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் வட்டாரத்தில் வீசாணம், வேட்டாம்பாடி, கோனூா், பெரியகவுண்டம்பாளையம், சிலுவம்பட்டி, மாரப்பநாய்க்கன்பட்டி மற்றும் தளிகைஆகிய ஊராட்சி பகுதிகளில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் 15 ஏக்கா் மற்றும் அதற்குமேற்பட்ட தரிசு நிலப்பரப்பை ஒரு தொகுப்பாக ஏற்படுத்தலாம். அத்தொகுப்பிற்குதோ்வு செய்யப்படவுள்ள 15 ஏக்கா் தரிசு நிலம் என்பது தொடா்ச்சியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் ஒருதொகுப்பிற்கு 8 விவசாயிகள் இருக்க வேண்டும். இத்திட்டம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள நாமக்கல் வசந்தபுரத்தில் அமைந்துள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT