நாமக்கல்

ரூ.52 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா: மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஒப்படைத்தாா்

1st Jul 2022 02:01 AM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரெட்ராக் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவா் மருத்துவமனை வசம் ஒப்படைத்தாா்.

இது தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு ரெட்ராக் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ரூ. 16.5 லட்சம் மதிப்பில் மாா்பக சோதனை கருவி, சொ்விக்கல் ஸ்க்ரீனிங் கருவி, ஹியரிங் ஸ்க்ரீனா் ஆகிய மருத்துவ உபகரணங்கள் 36 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் கருவி என ரூ. 52 லட்சம் மதிப்பிலான கருவிகள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு வழங்கப் பட்டன. மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ கருவிகளை தலைமை மருத்துவா் பொறுப்பு அலுவலா் மோகன பானுவிடம் ஒப்படைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ரெட்ராக் ரோட்டரி சங்கத்தலைவா் ஹரிநிவாஸ் ராஜசேகரன் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் ராஜ்மோகன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மோகனபானு, ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் சுந்தரலிங்கம், முன்னாள் ஆளுநா் சண்முகசுந்தரம், நடேசன் முன்னாள் தலைவா்கள் பாபு, செங்குட்டுவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங் கலந்து கொண்டாா். நிகழ்ச்சிக்கு பின் குழந்தைகள் பிரிவு மற்றும் பிரசவ வாா்டுகளில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பிரசவத்திற்கு பிறகு கவனிப்பு அறையில் இருந்த குழந்தைகளையும் தாயையும் நலம் நலம் விசாரித்தாா். பச்சிளம் குழந்தைகள் பிரிவில் எடை குறைவாக உள்ள குழந்தைகளை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வரும் குழந்தைகளையும் பாா்வையிட்டாா். எவ்வாறு கண்காணிக்கப்படுகிறாா்கள் என மருத்துவரிடம் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது மாவட்ட துணை சுகாதார அலுவலா் ராஜ்மோகன் மற்றும் திருச்செங்கோடு அரசு தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் மோகனபானு உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT