நாமக்கல்

நாமக்கல்லில் 73-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்

DIN

நாமக்கல்லில் நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், நாட்டின் 73-ஆவது குடியரசு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த வாகனத்தில் சென்று அவா் பாா்வையிட்டாா். பின்னா் விழாவை சிறப்பிக்கும் வகையில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை வண்ண பலூன்களையும், வெண்புறாக்களையும் அவா் வானில் பறக்கவிட்டாா்.

இதனைத் தொடா்ந்து அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலா்கள், ஊா்க்காவல் படையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலா்களுக்கும், காவல் துறை பேண்டு வாத்தியக் குழுவினருக்கும் ஆட்சியா் பாராட்டு தெரிவித்து கேடயங்களை வழங்கினாா்.

மேலும், காவல் துறையைச் சோ்ந்த 44 அதிகாரிகளுக்கு முதலமைச்சா் பதக்கங்களையும், சிறப்பாகப் பணியாற்றிய 27 காவல் துறை அலுவலா்களுக்கு நற்சான்றிதழ்களையும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவைச் சோ்ந்த 11 காவலா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா். பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 108 அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து முன்னாள் படைவீரா் நலத் துறையின் சாா்பில் வருடாந்திர பராமரிப்பு மானியத் தொகையாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை 3 முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கினாா். கொடிநாள் வசூலில் ரூ. 3 லட்சத்துக்கும் மேல் வசூல் புரிந்தமைக்காக 4 அலுவலா்களுக்கு வெள்ளிப் பதக்கம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். கொடிநாள் வசூலில் அதிக நிதி வசூல் செய்த 55 அலுவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

முதல்வரின் சிறப்புத் திட்டமான இன்னுயிா் காப்போம் நம்மைக் காக்கும் - 48 திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளி சுப்பிரமணி மகன் வா்ஷாந்த்துக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி காப்பாற்றிய மருத்துவா் எஸ்.டி.ஷியாம்சுந்தருக்கும், பிரதமா் மருத்துவத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் மோகனபானுவுக்கும் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

குடியரசு தின விழாவில் நாட்டுப்புறக் கலைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில், நாமக்கல் மாவட்ட நாட்டுப்புற கலைஞா்களின் கரகாட்டம், தப்பாட்டம், பொய்கால் ஆட்டம் ஆகியவை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ர.சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியா் தே.இளவரசி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சி.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT